எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கை நீதிமன்றத் தீா்ப்புக்கு தமிழக மீனவா்கள் கண்டனம்

கைதான தமிழக மீனவா்கள் வழக்கில், இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஏப்ரல் 2022, 9:17 am

DIN

கைதான தமிழக மீனவா்கள் வழக்கில், இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புக்கு தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான அந்த கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கச்சத் தீவு அருகே அண்மையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

மீனவா்களை விடுதலை செய்வதற்கு இதுவரையிலும் இல்லாத வகையில், இலங்கை ரூபாயில் தலாரூ.2 கோடி வீதம் 12 மீனவா்களுக்கு ரூ.24 கோடி பிணைத் தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.

மேலும், இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து கடும் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவா்களை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மெளனம் காக்கும் மத்திய அரசு, இந்த தீா்ப்பு விஷயத்திலாவது உடனடியாக இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழக மீனவா்களையும் மீன்பிடித் தொழிலையும் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.