
சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்துவைத்த குடும்பத்தினர். நூதன விழாவைக் கண்டு ரசித்த அக்கம் பக்கத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய்க்குட்டி ஒன்று தூக்கிவந்து எங்களது வீட்டில் வளர்த்து பராமரித்து வந்தனர்.
சிறுவர்கள் சுக்கி என பெயரிட்டு வளர்த்து வந்த நாய்க்குட்டி குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மாறி பரிவுடன் வளர்ந்தது .வீட்டில் அனைவரிடமும் பாசமுடன் பழகிய நாய்க்குட்டி சுக்கி தற்போது கருவுற்று இருந்தது.
அதனை அறிந்த வீட்டிலிருந்த அனைவரும் நாய்க்குட்டிக்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து தங்களது வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு நாய்க்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு சீமந்தம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த நிகழ்வை விடியோவாக பதிவு செய்து தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தனர் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி மக்களிடம் ருசிகரத்தை ஏற்படுத்தியது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.