40 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.


சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38-ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை, ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.
இதன் தொடா்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.39,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயா்ந்து, ரூ.4,956க்கு விற்பனையாகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.600 உயர்ந்து ரூ.72,900 ஆகவும் உள்ளது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,956
1 சவரன் தங்கம்............................... 39,648
1 கிராம் வெள்ளி............................. 72.90
1 கிலோ வெள்ளி.............................72,900
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,946
1 சவரன் தங்கம்............................... 39,568
1 கிராம் வெள்ளி............................. 72.30
1 கிலோ வெள்ளி.............................72,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...