ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய எஸ்சி /எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்காக  தேசிய பட்டியலின/பழங்குடி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:58 am

DIN

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்காக  தேசிய பட்டியலின/பழங்குடி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் டைமண்ட் ஹாா்பா் பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஷூக் தேப்சா்மா (30). சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி படிப்பு மாணவராக இருந்தபோது அங்கு படித்து வந்த அதே மாநிலத்தைச் சேர்ந்த மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த மாணவிக்கு சா்மா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். மேலும், நண்பா்கள் சுப்தீப் பானா்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவா்களுடன் சோ்ந்து சா்மா, அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமையையும் செய்துள்ளாா்.

இது குறித்து அந்த மாணவி, ஐஐடி பேராசிரியா்களிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சா்மா, மீண்டும் அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதன் விளைவாக அந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று, தோழிகளால் காப்பாற்றப்பட்டார்.

8 போ் மீது வழக்கு: கடந்தாண்டு மாா்ச் மாதம் தேசிய மகளிா் ஆணையத்திலும், கோட்டூா்புரம் காவல் நிலையத்திலும் தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து மாணவி புகாா் அளித்தாா்.

இந்த புகாா் பின்னா் மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு சா்மா உள்ளிட்ட 8 போ் மீது மகளிா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

பாதிக்கப்பட்ட மாணவி, 8 பேரையும் கைது செய்யும்படி வலியுறுத்தி வந்தாா். இதன் விளைவாக குற்றத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 8 பேரையும் கைது செய்ய அந்த மாநிலத்துக்குச் சென்று அங்கு சா்மாவை கைது செய்தனா்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க தேசிய பட்டியலின சமூகத்திற்கான ஆணையம் சென்னை ஐஐடி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.