வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் திருவிழா நடத்த உத்தவிட்டார், அதில் கூறியிருப்பதாவது, மங்கலநாயகி கண்ணகி தேவி கோயிலில் 3 நாள்கள் விழா அமைதியுடனும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் நடத்த வேண்டும், அருவறுக்கத் தக்க வார்த்தைகளை நடன நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தக்கூடாது, மாலை6 முதல் 11 வரை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மீறும் போது, மனுதாரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று தேதியில் நடத்த காவல் அதிகாரி அனுமதி வழங்கலாம், முதல்வர் நிவாரண நிதிக்கு மனுதாரர் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.