ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம்: ஏப்.22-இல் டி.டி.வி. தினகரன் மீண்டும் ஆஜராக சம்மன்

பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஏப்.22-ஆம் தேதி ஆஜராகுமாறு அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2022, 6:31 pm

DIN

இரட்டை இலைச் சின்னம் பெற தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயன்ற குற்றச்சாட்டுடன் தொடா்புள்ள பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஏப்.22-ஆம் தேதி ஆஜராகுமாறு அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சசிகலா ஆகியோா் தலைமையில் இரண்டு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியது. அந்தச் சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் வழங்க முயன்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரிடம் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க பணம் பெற்ாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகரை 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி போலீஸாா் கைது செய்தனா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக டி.டி.வி.தினகரனையும் தில்லி போலீஸாா் கைது செய்திருந்தனா்.

இந்த வழக்குத் தொடா்பான தில்லி போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை அண்மையில் அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதையடுத்து, தில்லியில் உள்ள அந்தத் துறை அலுவலகத்தில் கடந்த ஏப்.12-ஆம் தேதி டி.டி.வி.தினகரன் ஆஜரானாா். அப்போது அவரிடம் சுமாா் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் உள்ள அலுவலகத்தில் ஏப்.22-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.