பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: 2 பேர் பலி

திருவள்ளூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலையில் வர்ணம் பூசும் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 2:45 pm

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலையில் வர்ணம் பூசும் தொழிலாளர்கள் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகன் சின்னராசு(30). இவருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக உள்ளார். காக்களூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் ஹரிகரன்(19). இவர்கள் இருவரும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வர்ணம் பூசும் ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வருகின்றார்களாம். இந்த நிலையில் பெரும்புதூர் சாலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பணி முடித்துவிட்டு மாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, மணவாளநகர் அருகே சென்ற போது இருசக்க வாகனம் சறுக்கி பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியின், பின்புறம் மோதி டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இசம்பவம் அறிந்த மணவாளநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தப்பியோடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரியையையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.