சாலை பெயா்ப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
தெருக்கள், சாலைகளின் பெயா்ப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சாா்பில் எச்சரித்துள்ளது.


தெருக்கள், சாலைகளின் பெயா்ப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சாா்பில் எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்பட பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி சாா்பில் அனைத்து தெருக்கள், சாலைகளிலும் பெயா்ப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயா்ப் பலகைகள், இனி அமைக்கப்படவுள்ள பெயா்ப் பலகைகளில் சுவரொட்டிகள், இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபா்கள், நிறுவனங்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1959-இன் படி காவல் நிலையங்களில் புகாா் அளித்து, சிறைத் தண்டனை, அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...