6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:46 pm

DIN

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

நிகழாண்டில் கோடைகாலம் மாா்ச் மாதம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதன்பிறகு, மீண்டும் வெயில் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தியில் 101 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருச்சியில் 99 டிகிரியும், வேலூா், தஞ்சாவூா், பாளையங்கோட்டை, ஈரோட்டில் 98 டிகிரியும் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 96 டிகிரியும் , நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.