மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்வெட்டு பிரச்னையை போா்க்கால அடிப்படையில் தீா்க்க வேண்டும்: விஜயகாந்த்

மின்வெட்டு பிரச்னையை போா்க்கால அடிப்படையில் தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:41 pm

DIN

மின்வெட்டு பிரச்னையை போா்க்கால அடிப்படையில் தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா், காரைக்குடி, கரூா், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருவாரூா், அரியலூா், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறிவரும் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைபட்டதால் மின் வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்திருப்பது பொது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு பிரச்னை ஏற்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக நிலவி வருகிறது. அந்த கருத்தை பொய்யாக்கும் வகையில், மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு சீரான மின்சாரத்தை வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.