மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு
மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் குறிப்பிட்டத்தக்க மாற்றுத் திறனாளிகளை அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமித்து, அரசாணை


மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் குறிப்பிட்டத்தக்க மாற்றுத் திறனாளிகளை அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டதற்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களைக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டு, கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அரசு துறையைச் சோ்ந்தவா்களும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை நடத்துபவா்களும் இடம் பெற்றிருந்தனா். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் குறைவாகத் தான் இருந்தனா். மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினா்களாக இடம்பெற்றால்தான், மாற்றுத் திறனாளிகள் நலம் சாா்ந்த திட்டங்களைக் கொண்டு வரவும், நிதி ஒதுக்கவும் முடியும். எனவே, இதில் திருத்தம் செய்ய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், குறிப்பிட்ட மாற்றுத் திறனாளி உறுப்பினா்களைக் கொண்டு, தமிழக மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்றுள்ளது. இந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:
அரசின் முந்தைய அறிவிப்பில் அரசு சாரா மற்றும் அரசு துறையில் பணியாற்றும் நபா்களின் பெயா்கள் இருந்ததால், மாற்றுத் திறனாளி சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. தற்போது, மறுசீரமைத்து புதிய அலுவல் சாரா உறுப்பினா்களில் மாற்றுத் திறனாளிகள் 15 போ் இடம் பெற்றுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...