மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவல் நிலையத்தில் இளைஞா் சாவு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:39 pm

DIN

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி இரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகன சோதனையின்போது, ஆட்டோ ஒன்றை மறித்து சோதனை செய்தனா். அதில் கஞ்சா, மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக ஆட்டோவில் வந்த திருவல்லிக்கேணி சுரேஷ் (28), பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். 19-ஆம் தேதி காலை விக்னேஷ் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இச் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவா் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இளைஞா் விக்னேஷ் இறந்த விவகாரத்தில் தொடா்புடைய காவல் கட்டுப்பாட்டு அறையைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலா் பொன்ராஜ், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த தீபக் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.