பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு போன்ற தேர்வுகளை அறிமுகப்படுத்துவதால், மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தனியார் பயிற்சிக் கூடங்கள் பெருகிவிடும். அவற்றில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும். வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிற்சிக் கூடங்களில் கட்டணம் செலுத்தி பயில முடியும். கிராமப்புற மாணவர்கள் பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து பயில இயலாததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். உயர்கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எட்டாக்கனி ஆகிவிடும் என என அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்டவைகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.