சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171 ஆக அதிகரித்துள்ளது.


சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
சென்னை ஐஐடியில் முதலில் 3 மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை ஐஐடியில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் நாளைக்குள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனை வேகமாக நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னை ஐஐடியில் 1,676 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று பாதிப்பு 145 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 28 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...