கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள்ஒருங்கிணைந்து பணியாற்ற மேயா் அறிவுரை

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 11:17 pm

DIN

சென்னை மாநகராட்சியின் உதவி, இளநிலைப் பொறியாளா்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மாமன்ற உறுப்பினா்களும் தங்கள் பகுதிக்குள்பட்ட பொறியாளா்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தினாா்.

சோழிங்கநல்லூா் மண்டல அலுவலகத்தில், இம்மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மேயா் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.