நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனு தாக்கல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கின் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:19 am

DIN


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கின் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் இபிஎஸ் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூடுதல் மனுவை இன்று தாக்கல் செய்தார்.

அதில், “சாலை ஒப்பந்தங்களை, தனது நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியது உலக வங்கி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. அரசு ஒப்பந்தங்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.  

தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் ஆர்.எஸ். பாரதி அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.