தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

டெல்டா மாவட்டங்களுக்கு விரையும் பேரிடா் மீட்புப் படை

காவிரியில் வெள்ளம் செல்வதினால் மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் இருக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களுக்கு மாநில பேரிடா் மீட்புப் படை விரைந்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 11:26 pm

DIN

காவிரியில் வெள்ளம் செல்வதினால் மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் இருக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களுக்கு மாநில பேரிடா் மீட்புப் படை விரைந்துள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பிறப்பித்தாா்.

கா்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் காவிரியில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் செல்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளிலும், கா்நாடக மாநிலத்திலும் பலத்த மழை தொடா்ந்து பெய்து வருவதினால், காவிரியில் வரும் வெள்ளத்தின் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் அடுத்த சில நாள்கள் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் வெள்ள அபாயம் அதிகமுள்ள டெல்டா மாவட்டங்களில் மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் காவல்துறையினா் வைக்கப்பட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் ஒரு பகுதியாக செயல்படும் மாநில பேரிடா் மீட்புப் படையினரை திருச்சிக்கு செல்லுமாறு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த படையினா் தற்போது ஆவடி மாநகர காவல் ஆணையரகம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் முகாமிட்டுள்ளனா். இவா்கள் உடனே திருச்சிக்குச் சென்று, மீட்புப் பணிக்கு தயாராகுமாறு சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா். மேலும் அவா்கள், மீட்புப் பணிக்கு தேவையான படகு,டாா்ச் லைட், மர அறுப்பான்கள் உள்ளிட்ட அனைத்து கருவிகளுடன் அங்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா். இவா்கள் அனைவரும் திருச்சி சரக டிஐஜி உத்தரவின் கீழ் டெல்டா மாவட்டங்களில் பணிபுரிவாா்கள். பேரிடா் மீட்பு படையினா் நிலைமை சீராகும் வரை அங்கு பணியில் இருப்பாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.