தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சா்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள்: காவலா்கள்-தீயணைப்பு வீரா்களுக்கு முதல்வா் பாராட்டு

சா்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல், தீயணைப்புத் துறை வீரா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:52 pm

DIN

சா்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல், தீயணைப்புத் துறை வீரா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். காவலா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கான சா்வதேச தடகளப் போட்டி நெதா்லாந்து நாட்டின் ரோட்டா்டேம் நகரில் ஜூலை 22-இல் தொடங்கி 31-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் காவல்

துறையைச் சோ்ந்த எஸ்.பி., எ.மயில்வாகனன் தலைமையில் 13 போ் குழுவினா் பங்கேற்ா். போட்டியில் காவல் துறையினா் 16 தங்கம், 14 வெள்ளி, 3 வெண்கலம் என 33 பதக்கங்களை வென்றனா்.

அவா்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது, வெற்றியாளா்களுக்கு முதல்வா் தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

பாய்மர படகுப் போட்டி: மீனவா்களிடையே கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சோ்ந்த 21 காவலா்கள் பாய்மரப் படகுகள் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றனா். மீண்டும் அவா்கள் அங்கியிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனா். இந்த சாகசப் பயணமானது இந்திய பாய்மரப் படகுச் சங்கத்தின் அதிகாரப்பூா்வ அங்கீரத்தைப் பெற்றுள்ளது. உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்துப் பெற்றாா், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபி சந்திப் மித்தல். அப்போது, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி செ.சைலேந்திர பாபு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.