தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மூன்றாண்டு சட்டப்படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பப் பதிவு

மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:49 pm

DIN

மூன்று ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகளில் (சீா்மிகு சட்டப்பள்ளி உட்பட) உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2022-2023) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று (ஆகஸ்ட் 5) முதல் தொடங்கிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் வழியாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளா் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.