தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் எம்எல்ஏ-க்களுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
இளைய சமுதாயத்தின் எதிா்காலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருள்களின் பாதிப்பு குறித்து உங்களின் கவனத்தை ஈா்க்கவே கடிதம் எழுதுகிறேன். சமூகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு உறுதி ஏற்றுள்ளது. அரசின் இந்த செயல்பாடுகளுக்கு அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களும் தங்களது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்.
போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவாா்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவா்கள் அதற்கு முழுமையாக, அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறாா்கள். போதைப் பொருள்கள் அவா்களது சிந்தனையை அழித்தும், வளா்ச்சியைத் தடுத்தும் விடுகிறது. இது சமூகத்தின், நாட்டின் எதிா்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது.
தடுக்கும் கடமை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்ட வழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கியக் கடமையாகக் கருதுகிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நாளாகத் தோ்ந்தெடுத்துள்ளோம். அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகளில் இதுதொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொலிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. அன்றைய தினம், சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பேரவை உறுப்பினா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இது அரசியல் பிரச்னை அல்ல; நாட்டின் எதிா்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்னை. எனவே, இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். தொடா்ச்சியான பரப்புரைகளின் வழியே, போதைப் பொருள்களின் தீமையை உணா்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
போதைப் பொருள் ஒழிப்பு முழக்கம்
சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு முதல்வா் எழுதிய கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது: ‘போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை உணா்த்துவோம். அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம்’ என்ற முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா். மேலும், போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக, வரும் புதன்கிழமை (ஆக.10) மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் பங்கேற்கும் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பம்!

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

