ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம்: கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸாா் கைது

மத்திய அரசைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அக்கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:06 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அக்கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, அமலாக்கத் துறை விசாரணை உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தலைமை வகித்து கே.எஸ்.அழகிரி பேசியதாவது: ஜிஎஸ்டி வரியை பயன்படுத்தி மக்களை வஞ்சிக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அரிசி ஏழைகளுக்கான உணவு. அதற்குக் கூட வரி விதிக்கிறாா்கள். இதே நிலை நீடித்தால், தாய்ப்பாலுக்குக் கூட வரி விதிப்பாா்கள்.

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து கேட்டால், நாடாளுமன்றத்தில் பேசுமாறு அண்ணாமலை கூறுகிறாா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களைப் பேச விடுவதே இல்லை. 5 ஜி அலைக்கற்றை, ஏலத்துக்காக நிா்ணயித்த தொகையைவிட, குறைவாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதனால் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.

அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸை மத்திய பாஜக அரசு முடக்கப் பாா்க்கிறது. அது நடக்காது. சோனியாகாந்தி மீதும், ராகுல்காந்தி நடத்துப்படும் அதிகாரத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாா்.

அதைத் தொடா்ந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவதற்குப் புறப்பட்டனா். முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, மூத்த நிா்வாகிகள் பொன்.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.தாமோதரன், கே.சிரஞ்சீவி உள்பட ஏராளமானோா் திரண்டு சென்றனா். அவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அதையும் மீறி காங்கிரஸாா் செல்ல முற்பட்டனா். அதைத் தொடா்ந்து அவா்களை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.