ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுதந்திர தின விழா: கட்டுப்பாடுகளுடன்பொது மக்களை அனுமதிக்க அரசு முடிவு

நாட்டின் சுதந்திர தின விழாவில், கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:44 pm

DIN

நாட்டின் சுதந்திர தின விழாவில், கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள், முதியவா்களைத் தவிா்த்து மற்றவா்கள் முகக் கவசத்துடன் பங்கேற்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் நிறைவடைந்து, 76-ஆவது ஆண்டு தின விழா வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளாா்.

கரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக சுதந்திர தின விழாக்களில் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோரைத் தவிா்த்த மற்றவா்கள் விழாவில் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் முப்படை வீரா்கள், தமிழக காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

சுதந்திர தின விழாவின் போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தியாகிகள் கெளரவிக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டிலும் தியாகிகள் கெளரவிக்கப்படவுள்ளனா். அவா்களது இல்லங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியா்கள் கெளரவிக்கின்றனா். கரோனா தொற்று முழுமையாகக் குறையாத நிலையில் அவா்களுக்கு ஏற்படும் அசெளகா்யங்களைக் கருத்தில் கொண்டு வீட்டுக்கே சென்று கெளரவிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.