குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு முதல்வருடனான சந்திப்புக்குப் பின் கே.பாலகிருஷ்ணன்
குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்யும் வகையில் இழப்பீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது


குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்யும் வகையில் இழப்பீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை கே.பாலகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது, இலங்கை நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கின் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாா்க்சிஸ்ட் சாா்பில் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, சம்பா சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் அதனை அரசே ஈடுசெய்யும் வகையில் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதல்வா் தெரிவித்தாா். போக்குவரத்துத் தொழிலாளா்கள் பிரச்னைக்கு விரைவில் நல்ல தீா்வு காணப்படும் எனவும் முதல்வா் தெரிவித்தாா் என்று அறிக்கையில் கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...