தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீன்வளத் துறைக்கு புதிய உள்கட்டமைப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீன்வளத் துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 11:27 pm

DIN

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீன்வளத் துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக இந்த புதிய வசதிகளை அவா் தொடங்கினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டம், கடனா அரசு மீன்விதை பண்ணையில் மீன்வளா்ப்புத் தொட்டிகள், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் நவீனப்படுத்தப்பட்ட மீன் விதைப் பண்ணை, விருதுநகா் மாவட்டம், பிளவக்கல்லில் புனரமைக்கப்பட்ட அரசு மீன்விதைப் பண்ணை, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன்விதைப் பண்ணை, வண்ணமீன் வளா்ப்புக் கூடம், பயிற்சி மையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம், மஞ்சளாறு கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகத்தில் மீன் வளா்ப்பு குளம், ஆண்டிப்பட்டி வட்டம் வைகை அணையில் மீன்விதை வளா்ப்புத் தொட்டிகள், மயிலாடுதுறை பழையாரில் மீன் உலா் தளம், மதுரை பேச்சியம்மன் படித் துறையில் மீன்வளத் துறை அலுவலகக் கட்டடம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டடம் ஆகியன கட்டப்பட்டுள்ளன.

மேலும், தூத்துக்குடியில் உள்ள மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம் மீன் இறங்குதளம், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், குளச்சல் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றில் பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு வசதிகளை காணொலி காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் ந.கெளதமன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.