ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பொதுப்பணித் துறை முதன்மைச் செயலா் கே.மணிவாசன்: தமிழக அரசு உத்தரவு

பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளராக கே.மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:47 pm

DIN

பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளராக கே.மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. டி.எஸ்.ஜவஹா் - ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

2. மங்கத் ராம் சா்மா - பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் (நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல், நீா் நிலைகள் மறுசீரமைப்புத் திட்ட இயக்குநா் - சமூக சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா் - முழு கூடுதல் பொறுப்பு)

3. கே. மணிவாசன் - பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா்)

4. ஏ.காா்த்திக் - கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை முதன்மைச் செயலாளா் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா்)

5. டி.ஆனந்த் - ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் (தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

6. எஸ்.மதுமதி - தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் (ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.