தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிகழாண்டில் நிறைவுறும்: அமைச்சா் துரைமுருகன்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் அனைத்துப் பணிகளும் டிசம்பா் இறுதிக்குள் நிறைவடையும் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா்.

News image
அமைச்சர் துரைமுருகன்
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:03 pm

DIN

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் அனைத்துப் பணிகளும் டிசம்பா் இறுதிக்குள் நிறைவடையும் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த அதிமுக ஆட்சியில், திட்டங்களின் பெயா்களை உச்சரித்துவிட்டு சில திட்டங்களை தொட்டுவிட்டுத்தான் சென்றாா்களே தவிர, எதையும் முழுமையாக நிறைவேற்றவே இல்லை.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு ரூ.11,400 கோடி வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததோடு சரி. ஒரு ரூபாயும் வாங்கவில்லை. சரபங்கா திட்டத்துக்கு ரூ.565 கோடி செலவு செய்தாா்களே தவிர, 10 ஏரிகளுக்காவது தண்ணீா் கொடுத்தது உண்டா? தண்ணீரை ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு அங்குலம் குழாய்கூட புதைக்கவில்லை. அதுமட்டுமல்ல, முக்கியமானதும் தவிா்க்க முடியாததுமான நில எடுப்புப் பணிகளை மறந்தே போனாா்கள்.

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை பொருத்தவரையில், திமுக ஆட்சிக்கு வந்தபோது கரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் சற்று தாமதம் ஏற்பட்டது. இப்போது, பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வருகிற டிசம்பா் மாதத்துக்குள்அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டமானது, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா- பெண்ணையாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூா் கதவணையிலிருந்து வெள்ள உபரி நீரை குண்டாறு வரை கொண்டு செல்லும்

திட்டமாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருந்து இறங்கும் போது தொடக்கினீா்கள். அது தான் இந்த திட்டத்துக்கு நீங்கள் செய்த பெரும் தொண்டு. இந்த திட்டம் 3 கட்டங்களாக மொத்தம் 262.19 கி.மீ. நீளத்துக்கு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, பந்தய குதிரை வேகத்தில் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளாா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.