5 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள்: உங்கள் ஊரும் இருக்கலாம்

சென்னையில் ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகள்
புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகள்
Published on
Updated on
1 min read

சென்னையில் ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகள் இயக்கத்தையும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகள் இயக்கத்தையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக  சென்னையில், மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக, பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, இனிவரும் காலங்களில், மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும், பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, அண்ணாசாலை, ஓமந்தூரார் மருத்துவமனை மெட்ரோ இரயில் நிலைய வளாகத்திலிருந்து, மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு ஐந்து புதிய வழித்தடங்களில் 10 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

புதிய வழித்தட சிற்றுந்துகள் விவரம் பின்வாருமாறு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com