பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வழிகாட்டி பலகை விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3.லட்சம் 

சென்னை கத்திப்பாராவில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.  

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 9:18 am

DIN

சென்னை கத்திப்பாராவில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்றையதினம் (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, ஜி.எஸ்.டி. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.