கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165வது அவதார விழா அவரது கருப்பனேந்தல் மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image
அவதார விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
Updated On :11 ஆகஸ்ட் 2022, 12:45 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 165வது அவதார விழா அவரது கருப்பனேந்தல் மடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதையொட்டி புனித நீர் கலசங்கள் வைத்து மாயாண்டி சுவாமிகள் சன்னதி முன்பு சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. குலால சமுதாய சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.

பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கலச நீராலும் அபிஷேகப் பொருள்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

திரளான மக்கள் அவதார விழாவில் பங்கேற்று மாயாண்டி சுவாமிகளை தரிசனம் செய்தனர். மேலும் கருப்பனைந்தல் மடத்தில் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா கணபதி, முருகன் சன்னதிகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.