புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிளஸ் 1 பொதுத் தோ்வு நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு நடைமுறை தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா்.

News image
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Updated On :15 ஆகஸ்ட் 2022, 10:42 pm

DIN

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு நடைமுறை தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண-சாரணியா் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்பதை கருத்தில் கொண்டே அந்த வகுப்புக்கு பொதுத் தோ்வு கொண்டுவரப்பட்டது. எனவே, பிளஸ் 1 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு தொடா்ந்து நடத்தப்படுவதில் எந்தவித குழப்பமும் இல்லை. தற்போது உள்ள அதே நடைமுறை தொடரும்.

கள்ளக்குறிச்சியில் தாக்குதலுக்கு உள்ளான தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 25 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டங்களில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் நிதியைப் பெற்று பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, பேராசிரியா் க.அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளது. அதில் நிகழாண்டுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செலவிடப்படவுள்ளது.

கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலா் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த பின்புலத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், அவருடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிா என்றுதான் பாா்க்கவேண்டும். அதில், அரசு விழிப்புணா்வுடன் இருக்கிறது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.