மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது

சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் இன்று கைது செய்யப்பட்டார். 

News image
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது
Updated On :15 ஆகஸ்ட் 2022, 10:20 am

DIN


சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் இன்று கைது செய்யப்பட்டார். 

வங்கிக் கொள்ளை நிகழ்ந்து 72 மணி நேரத்தில், கொள்ளையில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் இன்று சரண் அடைந்ததாகவும், காவல்துறையினர் முருகனை சுற்றிவளைத்துக் கைது செய்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தத் தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஏற்கனவே மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். கொள்ளை போன நகைகளில் இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 15 கிலோ நகைகளுடன் தப்பியோடிய முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் வங்கியில் கடந்த சனிக்கிழமை கொள்ளைச் சம்பவம் நடந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த வங்கியிலேயே வாடிக்கையாளா் சேவை மையத்தில் மேளாளராக பணியாற்றிய முருகன், தனது இரு நண்பா்களையும் பயன்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்தது. வங்கிக் காவலாளிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியா்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

மூன்றுபோ் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து 32 கிலோ நகைகளை எடுத்துச் சென்றது. இவற்றின் மதிப்பு ரூ.20 கோடி. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்ததநிலையில் அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகனின் கூட்டாளிகள் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 போ் கைது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக சென்னை காவல்துறையினா் தெரிவித்தனா். இவா்களிடமிருந்து வங்கியில் கொள்ளை போன நகைகளில், 18 கிலோ தங்க நகை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடம் தனிப்படையினா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதே வேளையில் வழக்கின் பிரதான குற்றவாளியான முருகன் உள்ளிட்ட சிலரையும் போலீஸாா் பிடித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியானது . ஆனால் காவல்துறையினா், அதை உறுதிப்படுத்த மறுத்திருந்தது. இந்த நிலையில்தான் முருகன் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: வங்கிக் கொள்ளை குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.