சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
நாட்டின் சுதந்திர நாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.
இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்தார்.
பின்னர் காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வினை நினைவுகூரும் பொருட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட அருங்காட்சியகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிக்க | தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மநீமவுக்கு நிபந்தனை

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: ஒரே நாளில் 6 இடங்கள் குறிவைப்பு

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

