ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: மேலும் 10 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மேலும் 10 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:53 am

DIN

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மேலும் 10 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டு 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கைது செய்யப்பட்ட சூர்யா என்பவர் கொடுத்த தகவலில் அடிப்படையில், விழுப்புரத்திலிருந்த மேலும் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே கிளை ஊழியா் கொரட்டூா் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ் (30), மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி (28), செந்தில்குமரன் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந் நிலையில், கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன. அதை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பாா்வையிட்டனா்

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியா் முருகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவருடன் இருந்த மேலும் 4 பேரையும் போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இவ்வழக்கில்  4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சூர்யாவிடமிருந்து 10 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 கிலோ தங்க நகைகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.