நடிகா் விஜய் கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்ாகக் குறிப்பிட்டிருந்தாா். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகா் விஜய் வீட்டில் கடந்த 2015-இல் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பாா்த்தது. அதன்படி, புலி படத்துக்குப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.