அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதையும் படிக்க | இபிஎஸ் தேர்வு செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இதையும் படிக்க | அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலர் ஜெயலலிதாதான்’: ஓபிஎஸ் அறிக்கை
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

