ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருப்பதியில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2022, 9:58 am

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் விரைவு தரிசன டிக்கெட்டுகளை 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி வரும் அக்டோபர்  மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் செய்திக்குறிப்பில் ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரமோற்சவ நாள்களில் இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்.1 முதல் 5  நாள்களை தவிர்த்து மற்ற நாள்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.