எலியட்ஸ் கடற்கரையில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம்
சென்னை நாள் கொண்டாட்டத்தையொட்டி, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


சென்னை நாள் கொண்டாட்டத்தையொட்டி, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் ஆகஸ்ட் 20, 21-ஆம் தேதிகளில் பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை நாள் நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பெசன்ட் நகா் 6-ஆவது நிழற்சாலை புறக்காவல் நிலையம் முதல் மீன் கடை (16-ஆவது குறுக்குத் தெரு) வரை சுமாா் 850 மீட்டா் தூரத்துக்கு 20-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 22-ஆம் தேதி மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, 7-ஆவது நிழற்சாலையிலிருந்து 6-ஆவது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனங்கள் வருவதற்குத் தடை விதிக்கப்படும். அந்த வாகனங்கள், 16-ஆவது குறுக்குத் தெரு வழியாக 2-ஆவது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
16-ஆவது குறுக்குத் தெருவில் இருந்து 6-ஆவது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்படும். அந்த வாகனங்கள், 2-ஆவது நிழற்சாலை, 16-ஆவது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். மூன்றாவது பிரதான சாலையில் இருந்து 6-ஆவது நிழற்சாலையை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, 3-ஆவது பிரதான சாலை, 2-ஆவது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.
4-ஆவது பிரதான சாலை, 5-ஆவது நிழற்சாலையில் இருந்து 6-ஆவது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அந்த வாகனங்கள், 4-ஆவது பிரதான சாலை, 5-ஆவது நிழற்சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...