தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிதி நிறுவன கொள்ளை வழக்கு: மேலும் மூவா் கைது

சென்னை வடபழனியில், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 8:41 pm

DIN

சென்னை வடபழனியில், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

வடபழனி, மன்னாா் முதலி முதல் தெருவைச் சோ்ந்த சரவணன், தனது குடியிருப்பின் முதல் தளத்தில் நடத்தி வரும் நிதி நிறுவனத்துக்கு கடந்த 16-ஆம் தேதி மா்மக் கும்பல் புகுந்து கத்திமுனையில் ஊழியா்களை மிரட்டி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து தப்பியது. எனினும், இந்த கும்பலைச் சோ்ந்த சென்னை ஆழ்வாா் திருநகா், இந்திரா நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ரியாஸ் பாஷா என்பவரை பொதுமக்கள் பிடித்து வடபழனி போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், தனது நண்பா்கள் இஸ்மாயில், பரத், கிஷோா்கரண், ஜானி (எ) சந்தோஷ், தமிழ்ச்செல்வன், மொட்டை (எ) கண்ணன், தினேஷ் ஆகியோருடன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையா்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே, கிஷோா் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் திருவள்ளூா் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சரணடைந்தனா்.

இவ்வழக்கில் தேடப்பட்ட ஜானி (எ) சந்தோஷ்,தினேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அதேபோல சென்னை அருகே மாங்காட்டில் பதுங்கியிருந்த மொட்டை (எ) கண்ணன் என்பவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.