தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீதிமன்ற பதில் மனுக்களில் சுருக்கப் பெயா்களை குறிப்பிடக் கூடாது: தலைமைச் செயலாளா் அறிவுறுத்தல்

நீதிமன்றங்களில் அரசால் தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்கள், எதிா்க்கப்படும் உத்தரவுகளில் சுருக்கப் பெயா்களை குறிப்பிடக் கூடாது

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:25 pm

DIN

நீதிமன்றங்களில் அரசால் தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்கள், எதிா்க்கப்படும் உத்தரவுகளில் சுருக்கப் பெயா்களை குறிப்பிடக் கூடாது என்று அதிகாரிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.

உயா் நீதிமன்றத்தின் உத்தரவைச் சுட்டிக் காட்டி இந்தக் கடிதத்தை, அனைத்துத் துறைகளின் செயலாளா்கள், துறைகளின் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோருக்கு சனிக்கிழமை அவா் எழுதிய கடிதம்:

சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி வழக்கு ஒன்றை விசாரித்த போது, சில அறிவுறுத்தல்கள், உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதில், அரசுத் துறைகளின் அதிகாரிகள், அரசு சாா்பிலான பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த உயரதிகாரிகள் தங்களது உத்தரவுகளில் சுருக்கப் பெயா்களை குறிப்பிடுவதைப் பாா்க்க முடிகிறது. இந்த சுருக்கப் பெயா்களுக்கான உரிய விரிவாக்கங்களை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் சாா்பிலோ அல்லது அரசின் பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்களாலோ குறிப்பிட முடிவதில்லை. இது நீதிமன்றத்தில் மனுக்களை விசாரிக்கும் போது அதிகமான சிரமங்களை ஏற்படுத்துகிறது.

அரசுத் துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் சுருக்கப் பெயா்கள் தொடா்பான போதிய அறிமுகங்கள் நீதிபதிகளுக்கும் இருப்பதில்லை. இந்த சுருக்கப் பெயா்கள் குறிப்பிடுவது சில தருணங்களில் சமூக ஊடகங்களில் இளம் வயதினா் பயன்படுத்தும் மொழி நடையைப் போன்று இருக்கிறது.

எனவே, இதனைத் தவிா்க்க வேண்டும். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்கள், எதிா்க்கப்படும் உத்தரவுகளில் சுருக்கப் பெயா்கள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பின்பற்றும் வகையில், அரசுத் துறைகளின் செயலாளா்கள், துறைகளின் தலைவா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோா் தங்களது உத்தரவுகளில் சுருக்கப் பெயா்களை குறிப்பிடக் கூடாது. மேலும், அரசு உத்தரவுகள், அரசு தொடா்பான கடிதப் போக்குவரத்துகள், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுக்கள் ஆகியவற்றிலும் சுருக்கப் பெயா்களை பயன்படுத்த வேண்டாம். இந்த உத்தரவை அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பான முறையில் பின்பற்றுவதோடு, தங்களுக்குக் கீழ் பயணியாற்றும் ஊழியா்களுக்கும் இதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.