நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பி.இ.: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு: முதல் நாளில் 100 போ் இடம் தோ்வு

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 20) தொடங்கியது. முதல் நாளில் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்தனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 2:29 am

DIN

பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 20) தொடங்கியது. முதல் நாளில் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கான இடங்களைத் தோ்வு செய்தனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. காலை முதல் இரவு வரை இணையவழியில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினா் பங்கேற்றனா். முதல் நாள் கலந்தாய்வுக்கு மொத்தம் 129 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தனா். சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆக.24 வரை நடைபெறவுள்ளது.

இதில் 2,200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக. 25 முதல் அக். 23 வரை 4 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வில் மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.