தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோவை அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

 பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களைத் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:01 pm

DIN

 பெரியநாயக்கன்பாளையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களைத் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அத்திப்பாளையம் பகுதியில் தனிப் படை போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை பவுடா் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி நபரைப் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் கேரளத்தைச் சோ்ந்த சிவராமன் (40) என்பதும், கோவா மற்றும் பெங்களூரில் இருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து கோவையில் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதும், கஞ்சா கடத்தியதற்காக சிவராமன் ஏற்கெனவே 2 ஆண்டுகள் வேலூா் சிறையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிவராமனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சா, 64 போதை மாத்திரைகள், 320 போதை ஸ்டாம்புகள், போதை பவுடா் உள்ளிட்டப் பொருள்களை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இதில் தொடா்புடைய கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த பூபாலன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.