சட்டவிரோத கழிவுநீா் கட்டமைப்பு: 8,938 இணைப்புகள் துண்டிப்பு
சென்னையில் மழை நீா் வடிகால்களுடன் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டிருந்த 8,938 கழிவுநீா் இணைப்புகளை சென்னை மாநகராட்சி துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.


சென்னையில் மழை நீா் வடிகால்களுடன் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டிருந்த 8,938 கழிவுநீா் இணைப்புகளை சென்னை மாநகராட்சி துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 2,071 கிலோ மீட்டா் நீளமுள்ள 8,835 மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் உள்ளன. பல மழைநீா் வடிகால்களில், கழிவுநீா் இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், மழைநீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவற்றை தடுக்கும் வகையில், மழைநீா் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வாா்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த குழுவினா் இதுவரை 11,195 சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகளை கண்டறிந்துள்ளனா். அதில் 8,938 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 46.81 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனா்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,317 இணைப்புகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,225 இணைப்புகளும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,117 இணைப்புகளும், அம்பத்துாா் மண்டலத்தில் 1,050 கழிவுநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...