தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பொலிவுறு நகர் திட்ட ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நடந்த முறைகேடு தொடர்பான ஆய்வறிக்கையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.

News image

பொலிவுறு நகர் திட்ட ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:12 am

DIN


சென்னை: பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நடந்த முறைகேடு தொடர்பான ஆய்வறிக்கையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.

அறிக்கையை தாக்கல் செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், பொலிவுறு நகர் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது.  மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் அக்குழு விசாரணை நடத்தி  இன்று முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சென்னை, மதுரை உள்பட பொலிவுறு திட்டங்கள் நடைபெற்ற மாவட்டங்களில், நேரடியாக ஆய்வு செய்து, திட்டப் பணிகளின் வரைபடங்களையும், பொறியாளரிகளிடம் பணிகள் நடைபெற்று வருவது குறித்து நேரில் கேட்டும் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.