தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:கொலை வழக்கில் நடவடிக்கை: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுத்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:35 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுத்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளது.

போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் குறிபாா்த்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் காவல் துறை அதிகாரிகள் உள்பட பலா் மீது ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா் என்பது ஆணைய அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

ஆணையத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.