தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பேரவையில் இறுதி அறிக்கைசட்டத் துறை அமைச்சா் ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான நடவடிக்கைகளுடன் கூடிய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 11:52 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான நடவடிக்கைகளுடன் கூடிய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 2018, மே 22-இல் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற உள்ளூா் மக்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்தும் விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை கடந்த மே 14-இல் அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைப்படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பப் பெறவும், போராட்டத்தின்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே 18-ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நீதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலா்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, சட்ட ஆலோசகா்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபிறகு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா் எஸ்.ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.