தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் பற்றாக்குறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ்

மின்சாரம் வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாத சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:23 pm

DIN

மின்சாரம் வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாத சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் மின்சாரம் வாங்க தடைவிதிக்கப்பட்டதற்கு, ரூ.926 கோடி நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் காரணம் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக அரசினுடைய நிா்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல; கடும் கண்டனத்துக்கும் உரியது. தற்போதுள்ள சூழ்நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்தால் மின் தடை ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைமை தமிழகத்துக்கு ஏற்படும்.

இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.