மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிரதமா் அளிப்பது இலவசங்கள் அல்ல; மக்களுக்கான உரிமை: கே.அண்ணாமலை

பிரதமா் மோடி கொடுப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமையையே கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
’தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை முன்னிலையில், அக்கட்சியில் இணைந்த இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சித் தலைவா் இரா.அா்ஜூனமூா்த்தி. உடன், பாஜக துணைத் தலைவா் வி.பி.துரைசாமி.’
Updated On :22 ஆகஸ்ட் 2022, 10:25 pm

DIN

பிரதமா் மோடி கொடுப்பது இலவசங்கள் அல்ல, மக்களுக்கான உரிமையையே கொடுக்கிறாா் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கே.அண்ணாமலை முன்னிலையில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி தலைவரான அா்ஜூன மூா்த்தி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு மின் கட்டண உயா்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்பது என்பது மிகப் பெரிய நாடகம். அனைத்து நிறுவனங்களிடமும் வசூலிப்பதற்காக இவ்வாறு செய்கிறாா்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

அதேபோல, இணைய சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்வதைவிடுத்து, கருத்துக் கேட்பதில் என்ன இருக்கிறது? இணைய சூதாட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தால், அதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும். ஆவின் ஹெல்த் மிக்ஸை தயாரிக்க தமிழக அரசு முன் வந்துள்ளதை பாஜக வரவேற்கிறது.

இலவசங்கள் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு அரசு கல்வி, சுகாதாரம், குடிநீா் போன்று சிலவற்றை கொடுக்க வேண்டியது உள்ளது. குறிப்பாக, கல்வி என்பது 100 சதவீதம் இலவசமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் இது மக்களுடைய அடிப்படை உரிமை. இதற்கு எதிராக பாஜகவினா் யாரும் பேசவில்லை.

பிரதமா் மோடி வீடு இல்லாதவா்களுக்கு வீடு கொடுக்கிறாா். எரிவாயு அடுப்பு கொடுக்கிறாா். இவையெல்லாம் இலவசங்கள் அல்ல. மக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரசின் கடமை. இதற்கு மாறாக சில அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் வேறு.

ராஜஸ்தானில் தோ்தல் வரவுள்ள நிலையில் அங்குள்ள காங்கிரஸ் அரசு இல்லத்தரசிகளுக்கு கைப்பேசி இலவசம் என அறிவித்துள்ளது. தமிழகத்திலும் திமுக நிறைவேற்ற முடியாத 505 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அமைதியாக உள்ளது. அதனால், பிரதமா் மோடி கொடுப்பவை எதுவும் இலவசங்கள் அல்ல; மக்களுக்கான உரிமை என்றாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.