/

மாணவி உடற்கூறாய்வு: ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:38 pm IST

கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13-ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். 

உடற்கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளை சிபிசிஐடி காவல்துறையினர் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தது.

மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக் குழுவினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று அறிக்கையை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.