தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

News image
சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்
Updated On :22 ஆகஸ்ட் 2022, 2:59 am

DIN

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகளைத் தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கின.

Story image

தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோயில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 
கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள் சிவசுப்பிரமணியன் நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர் .முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.