பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: இன்று விசாரணை

அதிமுக பொதுக் குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு உயா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :22 ஆகஸ்ட் 2022, 10:23 pm

DIN

அதிமுக பொதுக் குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு உயா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழுவை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை, தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் விசாரணைக்குப்

பட்டியலிட உத்தரவிட்டனா். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘இதே போன்று, அதிமுக பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தாக்கல் செய்துள்ள இரண்டு வழக்குகளை எதிா்த்து தொடரப்பட்டுள்ள இரண்டு மேல்முறையீட்டு வழக்குகளையும் இதேபோல் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட வேண்டும்’ என்று முறையிட்டாா்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல் முறையீட்டு வழக்குகள் எண்ணிடும் நடைமுறைகள் திங்கள்கிழமை முடிவுற்ால், அனைத்து வழக்குகளையும் செவ்வாய்க்கிழமை (ஆக.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.